காவல்துறையினருடன் இளைஞர்கள் குழு முறுகல்!

  திருகோணமலை நிலாவெளி உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இளைஞர்கள் குழுவொன்று இடையூறு விளைவித்துள்ளது.

agp win tamil news/ காவல்துறையினருடன் இளைஞர்கள் குழு முறுகல்/A group of youths clashed with the police!



குறித்த சம்பவமானது, நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த வயது(17) இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



 அதன்படி, கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு காவல்துறையினரை கடமையை செய்ய விடாது வீட்டுக்குள் இழுத்து சென்ற குற்றச் சாட்டில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.




 மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 நபர்கள் தேடப்பட்டு வருகின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை நிலாவெளி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.