வர்த்தக போரில் யாரும் வெற்றி பெறப்போவது இல்லை. அமெரிக்கா தனது சொந்தப் பாதையில் பயணிக்க முடிவு செய்தால், சீனாவும் கடைசி வரை போராடும். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியாழன் முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 84% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்ததற்கு பதிலடியாக, புதன்கிழமை (ஏப்ரல் 9) தொடங்கிய 104% வீதத்திலிருந்து சீன இறக்குமதிகள் மீதான வரியை ட்ரம்ப் 125% ஆக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது என ஃபாரெல் அறிவிப்பில் கூறினார்.
அண்மையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப், தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார்.
நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்ந்தார்.
போர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போப்பின் மறைவு உலக வாழ் கத்தோலிக்க மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.