மகளை கடத்திச் சென்ற தந்தை கைது ! Srilanka Tamil News

மகளை கடத்திச் சென்ற தந்தை கைது ! Srilanka Tamil News


  திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் மாத்தறை, வெலிகம - பொரலாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி, இடம்பெற்றுள்ளதுடன் காணாமல் போன பெண் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


 சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


 இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இரு உறவினர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களை மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 மேலும் தந்தை, மகளை கடத்தியதற்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.