மனிதர்களை போல பேசும் காகம்

  

agp win tamil news

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள இந்த காகம் மனிதர்களை போல பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


 மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கா்காவ் கிராமத்தை சேர்ந்த பெண் தனுஜா முக்னே. இவர் தனது தோட்டத்திற்கு சென்றபோது காகம் ஒன்று காயமடைந்து கிடந்ததை கண்டு அதனை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வந்தார்.


 காகம் குணமடைந்து பறக்க தொடங்கியதும் வேறு எங்கும் செல்லாமல் தனுஜா முக்னே வீட்டையே சுற்றி சுற்றி பறந்து வந்தது. சில வேளைகளில் காகம் தனுஜா முக்னேவின் மடியில் அமர்ந்து, தனுஜா பாசத்தோடு காகத்துக்கு உணவு ஊட்டி விடுகிறார்.


இந்தநிலையில் திடீர் அதிசயமாக அவரது வீட்டில் பேசும் பேச்சுவழக்கை காகம் அறிந்து காகா (மாமா), பாபா (தந்தை) மம்மி (தாய்) உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசி வருகிறது.



இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காகம் பேசுவதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வியந்து வருகின்றனர்.