மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மலிவு விலையில் சத்தான உணவைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இன்று (01) நாரஹேன்பிட்டவில் உள்ள தேசிய உணவு மேம்பாட்டு சபையின் "பெலஸ்ஸ" உணவகத்தில் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் "க்ளீன் சிறிலங்கா" திட்டத்துடன் இணைந்து, தற்போது உணவகங்களை நடத்தும் வணிகர்களின் ஆதரவுடன், தேசிய உணவு மேம்பாட்டு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் இருநூறு ரூபாய்க்கு குறைவான விலையில் சிறப்பு, சத்தான உணவை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த சத்தான, சமச்சீர் உணவுத் திட்டம் எதிர்காலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் உணவகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொதி செய்யப்பட்ட உள்ளூர் உணவுகள் மற்றும் சத்தான சிற்றுண்டிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வர்த்தக சமூகத்திற்குள் வழிகாட்டுதலை வழங்குவதையும் மனப்பான்மை மேம்பாட்டை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, க்ளீன் சிறிலங்காதிட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.