மூதூரில் பெரிய சிலுவைப் பாதை நிகழ்வு

  

agp Win Tamil News/மூதூரில் பெரிய சிலுவைப் பாதை நிகழ்வு/Great Stations of the Cross event in Muthuru

இயேசு கிறிஸ்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர் துறந்த நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் பெரிய வெள்ளியை முன்னிட்டு மூதூர் -இருதயபுரம் இருதயநாதர் தேவாலயத்தில் இன்று(18) காலை சிலுவைப் பாதை இடம்பெற்றது.


தேவாலயத்திலிருந்து ஆரம்பமான சிலுவைப் பாதை உள் வீதியூடாக பயணித்து மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.


சிலுவைப்பாதை யாத்திரையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் இந் நிகழ்வானது தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.