இறந்தவர்களின் தகவல்களைக் கொண்டு மோசடியாக ஒன்று சேர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 1000 வாகனங்கள், இறந்தவர்களுக்குச் சொந்தமான வாகனங்களின் எண்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
வாகனங்களின் உரிமை
இறந்தவர்களின் தகவல்களைச் சேர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு இறந்த பிற நபர்களின் பெயர்களில் வாகனங்களின் உரிமையை வழங்குவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016 முதல் 2024 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 சொகுசு வாகனங்கள் மற்றும் ஒன்று சேர்க்கப்பட்ட சொகுசு வாகனங்கள் தவறான தகவல்களின் அடிப்படையில் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.