வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை....!

  பல மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  


இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை எச்சரிக்கை அறிவிப்பில் இந்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை


 மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



 கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.